welcome good heart!!!

thank you for visiting my blog.

Thursday, August 27, 2015

Prosopis juliflora

சீமைக் கருவேலம்

சீமைக் கருவேலம் என்றும், வேலிக்காத்தான் என்றும் பரவலாக அறியப்படும் இது வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய ஒரு கொடியத் தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் ப்ரோசோபிச் சூலிஃப்லோரா Prosopis juliflora என்பதாகும். இதை எசுப்பானிய மொழியில் bayahonda blanca எனக் கூறுவர். மெக்சிகோகரிபியன் தீவுகள் மற்றும் தென் அமெரிக்கா போன்றவற்றை தாயகமாகக் கொண்ட இவை, ஆசியஆசுதிரேலியக் கண்டங்களில் மிகப்பெரும் நச்சுக் களைத் தாவரமாக உருவெடுத்துள்ளது.
பயிர்களுக்கு வேலியாகவும் சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையில், 1950களில் ஆசுத்திரேலியாவில் இருந்து சிறிதளவு விதையாக இது இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த அறுபது ஆண்டுகளில் வளர்ந்து பெருகிப் பரவி இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது. இந்த முள்மரம், அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான நச்சுத் தாவரமாக அறிவிக்கப்பட்டு வேளாண் கண்காட்சியில் மட்டும் வைக்கப்பட்டு வருகிறது.கேரளாவில் இவை வேறோடு பிடுங்கியெறியப்பட்டு இவை வளரா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது.

தன்மை

இதன் வேர், நிலத்தில் ஆழச்சென்று நிலத்தடி நீரையும் உறிஞ்சக்கூடியது. இதன் வேர் (53 மீட்டர்) 175 அடி நீளம் வளரக்கூடியதென பதிவிடப்பட்டுள்ளது. இதன் தண்டுப்பகுதிகளில் திரவ ஒழுக்கு காணப்படும்.எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இவை ஆழ வேர் மட்டுமில்லாமல் உறுதியானப் பக்கவேர்களையும் கொண்டு வளர்வதால் இவை மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்குச் செல்வதை தடைசெய்கிறது. எந்த நோயினாலும் பூச்சிகளாலும் தாக்க முடியாத, எந்த இடத்திலும் மற்ற தாவரங்களை அழித்துவிட்டு தான் மட்டும் செழித்துப் படருகின்ற தன்மை வேலிக்காத்தானுக்கு மட்டுமே உண்டு. இவை வாழும் இடத்தில் உற்பத்தி செய்யும் நச்சுப்பொருளால் நிலத்தில் பிற செடிகள் வளர்வதை அறவே தடுக்கிறது.

பாதிப்புகள்


வறட்சி காலங்களில் நிலத்தடி நீரை இம்மரம் உறிஞ்சிவிடுவதால் மற்ற தாவரங்களுக்கு போதிய நீர் கிடைப்பதில்லை. இவை நிலத்தில் பிற செடிகள் வளர்ப்பைத் தடுக்கிறது. நிழல் மரமாகவோ, கனி மரமாகவோ, கதவு சன்னல் என்று பயன்பாட்டிற்குரிய பொருள்களைச் செய்வதற்கோ எவ்வளவு பசுமையான தழையாக இருந்தாலும் அடியுரமாக இடுவதற்கோ, குறைந்தபட்சம் பறவைகள் அமர்ந்து கூடு கட்டுவதற்குக்கூட வேலிக்காத்தான் பயன்படுவதில்லை.[1] இவைகளால் ஏற்படும் பாதிப்பு அளவிட முடியாதது.
பல்லாயிரம் பறவைகளின் சரணாலயமாகத் திகழும் வேடந்தாங்கல் ஏரியில் செழித்து வளர்ந்த வேலிக்காத்தான், பருவ காலத்திற்கு வந்து அந்த ஏரியில் நீந்த முனைந்த வெளிநாட்டுப் பறவைகளையெல்லாம் குத்திக் கிழித்துக் கொன்று, பின்பு வனத்துறையின் முயற்சியால் அந்த மரங்கள் பிடுங்கி எறியப்பட்டுள்ளன. அதன் முள் குத்தி இறந்துபோன விவசாயிகளும் நிறையபேர் உண்டு.[சான்று தேவை] தாவரம் முழுமையுமே நஞ்சாக உள்ளது.
  • விவசாயம் மற்றும் ஏனைய செடிகள் தழைக்கா வண்ணம் நிலத்தை வீணடிக்கிறது.
  • அடர்ந்து வளர்ந்து பெரும் பகுதியே ஆக்கிரமிப்பு செய்துவிடக்கூடியது
  • நஞ்சு மிகுந்த முட்கள் விலங்குகளுக்கும் மாந்தர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துபவை.
  • புல்களை அடியோடு வளரவிடாமல் கால்நடைகளுக்கு பாதிப்பேற்படுத்துகிறது.
  • நிலத்தடி நீரைக்குறைப்பதால் சில அரிய மூலிகைகளின் இழப்பு
  • இவைகளின் வீரியத்தால் பிறத்தாவரங்களுடன் கலந்து உட்கொள்ளும் கால்நடைகள் உயிரிழப்பு மற்றும் வயிறு கோளாறுகள் அடைகின்றன
இதைப்போல் இதன் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கின்றன. இறுதியில் விளைநிலங்கள் பாலைவனங்கள் ஆகின்றன.

அழிக்கும்முறை

ஆசிட் அல்லது வேறுவகையான முயற்சிகள் மனவளத்தை கெடுக்கும் என்பது சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கத்தினரின் கருத்து. மேலும், பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் இடத்தில் மீண்டும் நல்ல மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலமாக மீண்டும் சீமை கருவேலமரங்கள் முளைத்துவிடாமல் அழிக்கப்படுகிறது. இந்த மரங்களை அழித்தாலும் மீண்டும் முளைத்துவிடுகிறது என்று பொதுவான கருத்து மக்களிடையே நிகழ்கிறது. ஆனால் இந்த மனநிலை முற்றிலும் தவறு. முறையாக அகற்றினால் இம்மரங்கள் வளர்வதை தவிர்க்கலாம்.
 www.aaproject.org 

மாற்றுவழி

இதன் விறகுகள் அதிக ஆற்றல் கொண்டவை என அறியப்பட்டுள்ளது. இவைகள் மின்சார உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவை வளர்க்க வேண்டிய இடம் பாலைவனம், விளைநிலமல்ல.